3/4/2013 - இன்று மலேசிய நாடாளும் மன்றம் கலைக்க பட்டுவிட்டது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிடும்.
எல்லா கட்சிகளும் இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று பிரச்சாரம் செய்வார்கள்.
எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவுக்கு வாய்பேச்சில் வீரராக பேசியும் பூசி மொழுகவும் செய்வார்கள்.
மக்களாகிய
நாம் உசாராக வேண்டிய தருணம் இது. நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் நம்
உரிமை குரலாகும். கவனம் தேவை. விழிப்புணர்வு அதி முக்கியம்.
வாக்கை அளித்து தகுந்த தலைவரை நாம் தேர்ந்தெடுக்கும் பெரும் பொறுப்பு நம் கையில் உள்ளது.
சுயநலம் கருதாமல் எல்லா இன மக்களுக்கும் சரி சமமாக சேவை செய்யும் ஒருவரை தான் மக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும்.
மலாய்காரர்களுக்கு சேவை செய்ய நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டும் வந்து விட்டனர்.
எல்லா துறைகளிலும் பெரும்பான்மையாக இருப்பவர்கள் மலாய்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
சீன இனத்தவர்களுக்கும் நல்ல செல்வாக்கு உண்டு, வர்த்தக துறையை தமக்கு சாதகமாக்கி கொண்டு வெற்றி நடை போடுகிறார்கள்.
மலேசிய
இந்திய மக்களோ 80% இன்னும் அடி மட்டத்தில் தான் இருக்கிறார்கள். இவர்கள்
மற்ற இனத்துடன் சரி சமமாக முன்னுக்கு வர வாய்ப்பு மறுக்க பட்டு வருகிறது.
பூர்வ
குடியினரும் இந்த கட்டத்துக்குள் தான் வாழ்கிறார்கள். இந்த நாட்டுக்கு
சொந்தக்காரர்களான அவர்கள். இருப்பினும் அவர்களின் உரிமைகள் மறுக்க பட்டு
இன்னும் காட்டு வாசிகள் போல் வாழ்கிறார்கள்.
நாம் முன்னுக்கு வர வேண்டும் என்றால் உரிமை குரலை எழுப்பியாக வேண்டும். அதற்கு சரியான் தருணம் தேர்தல் நேரம்.
மலேசிய
இந்திய மக்களான நாம் ஹின்ராப் பரிந்துரைக்கும் 5 ஆண்டு திட்டத்தை
கையொப்பம் இடாத எல்லா கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தையும் முதலில்
புறக்கணிக்க வேண்டும்.
இந்த புறக்கணிப்பு அவர்களுக்கு பீதியை கிளப்பும், சரித்திரம் படைக்கும்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, செல்லடா என்று கூறிக்கொண்டு இருந்தால் எதுவும் நடக்காது.
செயல் படுத்த நல்ல தருணம் இதுவே.
இம்முறை நாம் செயல் படுத்த தவறிவிட்டால் ஆண்டவனாலும் நம்மை காப்பாற்ற முடியாது.
உலக
தமிழர்கள் அனைவரும் ஓன்று கூடி தமிழரின் தலை எழுத்தை நிலை நிறுத்த
வேண்டிய கட்டம், நிர்பந்தம் வந்து விட்டது. நம் நாட்டில் அது நம் கையில் ஊள்ளது.
எனகென்ன உனக்கென்ன என்று சும்மா இருந்தால் நாம் இழக்கப்போவது நமது எதிர்காலம் மட்டும் இல்லை நம் குழந்தைகளின் எதிர்காலமும் கூட.
நம் உரிமையை பாது காக்க, சுய உரிமையை மீட்டு கொள்ள யாருக்கு வாக்கு போடா வேண்டும் என்பதை ஹிந்ட்ரப் நடத்தும் பேச்சு வார்த்தைகளுக்கு பின் தெரிய வரும்.
அது வரை நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ரெண்டு பட்டாள் கூத்தாடிக்கு கொண்டாட்டமாகிவிடும்.
ஹிந்தரப் இது வரை 18 முறை மக்கள் கூட்டணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்திருக்கிறது.
பிரதமரையும் ஒரு முறை சந்தித்து இருக்கிறது.
இரு
தரப்பும் பழைய பல்லவியை தான் பாடுகிறார்கள். நம் கோரிக்கை நல்லதாக
இருப்பதாக சொல்கிறார்கள் ஆனல் கையொப்பம் மட்டும் போட மாட்டார்களாம்.
நம்
உரிமைகளை இது வரை பறித்தது போதாதாம் மேலும் அடிமை படுத்தி ஆட்சி நடத்தலாம்
என்று கங்கணம் கட்டி கொண்டு இறுமாப்புடன் பதில் அளிக்கிறார்கள்.
இவர்களுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க வேண்டும், அது நம் ஒற்றுமையில் தான் இருக்கிறது.
நாம் மற்ற இனத்தவர்களுடன் சரி சமமாக நடைபோட வேண்டும் என்றால் நாம் தன்மானத்தை விட்டு கொடுக்க கூடாது.
தூங்கினது போதும், எழுந்து நில்லுங்கள், போராடுங்கள். நம் சமுதாயம் மென் மேலும் வளரும்.
பயம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. நிமிர்ந்து நில்லுங்கள்.
முதல் கட்டமாக தேர்தல் பிரட்சாரத்தை புறக்கணியுங்கள். இது பெரும் அழுத்தத்தை கொடுக்கும்.
வாழ்க நம் மக்கள்....
தொடரும்...
Wednesday, April 3, 2013
Tuesday, April 2, 2013
Hindraf Waytha`s Hunger Viratham final day
Watch This video please and share with all Malaysian Indians.....................
The day that Waytha Moorthy ended his Hunger Strike. Very intense and emotional event.
Saturday, March 2, 2013
KUALA LUMPUR: The bodies of the two police commandos, killed in the
clash between Malaysian armed forces and Sulu gunmen in Lahad Datu, will
arrive at Subang airport early Saturday morning, said Assistant Head of
the IGP Secretariat (Public Relations) ACP Ramli Mohamed Yusof.
The two men - Insp Zulkifli Mamat, 29, dan Kpl Sabarudin Daud, 46 - had served in the Ulu Kinta camp in Perak.
Zulkifli, from Kampung Kubang Ikan, Besut, Terengganu, leaves behind wife Noraziah Noor and two sons aged four and one.
Sabarudin, from Sungai Besar, Sabak Bernam, leaves behind wife Nurunisa Abu Bakar, two sons and a daughter.
The three injured commandos are Kpl Mohd Tarmizi Hashim, 32, Kpl Azman
Ampong, 39, and Konstabel Mohamad Qaiyum'aiqal Zolkifli, 22.
Ramli said Mohd Tarmizi had injuries to his hand and feet while Azman suffered injuries to his thigh and buttocks.
They are being treated at the Lahad Datu Hospital.
Meanwhile, Mohamad Qaiyum'aiqal who suffered injuries to his right
shoulder and both legs was flown to Sandakan Hospital.
Bernama
Subscribe to:
Posts (Atom)