Wednesday, October 21, 2009

தோட்டபுரத்தில் இருக்கும் போது கூட இவ்வளவு கஷ்டம் படவில்லை என இந்த தாய் என்னிடம் கூறுகிறார்.
படிவம் நான்கு வரையில் காராக், பகாங் இடைநிலை பள்ளியில் படித்தவர். தன் தாயார் நோயில் அடிப்பட்டதால் இவர் மேலும் கல்வியை தொடரமுடியாமல் போயிற்று. அடிக்கடி பெரிய மருத்துவ மனைக்கு செல்லவேண்டி இருந்ததால் இவர்கள்
கோலா லும்பூர் வந்தார்கள். இங்கு சரோஜா தன் மாமனை திருமணம் செய்யவேண்டிதாகிற்று.

திருமண வாழ்கை சில காலங்களே ஆயின நான்கு மாதத்திலேயே சரோஜவிக்கு இழுப்பு ஏற்பட்டது..இவரால் தன் கணவருக்கு முழுமையான சுகம் கொடுக்க இல்லாமல் போனது.மனைவிக்கு உடல்நலம் சரில்லாதபோத்து குஉட கணவருக்கு அதில் தான் மிகுந்த நாட்டம்.. இதனிடையே மகனும் பிறந்தான். இல்லற பிரச்னை தலைதூக்கியது.. கணவர் இவரை விட்டு போய் விட்டார்.

சரோஜா அருகாமையில் அமைந்த டெக்ஸ்கோ வில் கணக்கு வேலை செய்து தன் தாயையும் மகனையும்கவனித்து வந்தார். ஒரு நாள் அதுவும் விடுமுறை நாளில் வலிப்பு வந்து விழுந்து விட்டார். பிறகு தான் தெரிய வந்தது சரோஜாவுக்கு தலையில் புற்றுநோய் கண்டுள்ளது என்று..
அக்கம் பக்கம் குடிஇருப்பவர்கள் சரோஜாவுக்கு மருத்துவ செலவுக்காக பண உதவி செய்தார்கள் .மருத்துவ செலவுகளை ஹர்டமஸ் மஇக செய்து உதவினர்.
பிறகு வேல்பாரே அமாவுக்கும் மகளுக்கும் இன்று வரை தலா நூறு வெள்ளி கொடுதுவருகிறதாம்
வாடகை வீடு மூநூறு வெள்ளி ....தலை அறுவைசிகிச்சைக்கு பிறகு சரோஜாவுக்கு நினவு குறைந்துவிட்டதாம், முன்பு போதல வேலை செய்ய முடியாது, இருந்தும் வீடிலிருந்து சிறு தொழில் செய்து வருகிறார்கள். கோம்மிசின் வொர்க் .

முதலில் மஇகா கிளை தலைவர்கள் இவர்களுக்கு மருத்துவ செலவுகளை ஏற்று கொண்டனர். மிகா வின் உதவிக்கு நன்றி உருகின்றார்.இக்கடான நேரத்தில் இவர்கள் உதவி செய்ய வில்ல என்றால் இன்று என்னிடம் உறவாட கூட அவர் இருந்திருக்க மாட்டாராம்.
வருகின்ற தீபாவளிக்கு வேண்டிய செலவு பொருட்கள் வாங்க கூட பணம் இல்லை .இன்று கூட மருத்துவ மனக்கு ஸ்கேன் செய்ய சென்று என்ன காண வந்தார்கள்.
தீபாவளி கொண்டாடம் எல்லோருக்கும் உண்டு எங்களுக்கு இல்லை என வருத்தத்துடன் கூறுகிறார் சரோஜா.
இவரது மகன் பெயரர் தினேஸ் வயதுஆறு பாலார் பள்ளி படிக்கிறான் இன்று தாயார் ருடன் மருத்துவ மனைக்கு உடன் வந்துளான். நல்ல டான்ஸ் ஆடுவானாம் . கவலைபடாதிங்க மா நான் டான்ஸ் ஆடி உங்களை வாழவைக்கிறேன் என சொல்லுகிறான்.
சொந்தம் பந்தங்கள் இருந்தும் இல்லாதவர்களாக இருக்கும் இந்த சரோஜா முள்ளில் வாழுகிறாள் .
அவள் இருக்கும் வரையாவது நல்ல உள்ளங்கள் உதவுவார்களா?

What is Islam ?